இலங்கை லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா

(UTV | இந்தியா) – வீதிப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய லெஜன்ட்ஸ் அணி, கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

நேற்றைய மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய லெஜன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய லெஜன்ட்ஸ் அணி சார்பில்,யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும், யூசுப் பதான் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

182 எனும் வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணி சார்பில், சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கமைய, போட்டியின் சிறப்பாட்டக்காரராக யூசுப் பதான் தெரிவானதுடன், தொடர் நாயகனாக திலகரத்ன தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *