தென்னிந்திய திரைப்படமொன்றை பார்த்து அதே போன்று கொள்ளையிட முயன்றவர் கைது

(UDHAYAM, COLOMBO) – தனது பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவித்து, திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்ள முயன்ற நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் , மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சம்பவம் கைது செய்யப்பட்ட நபரால் திட்டமிடப்பட்டது என தெரியவந்துள்ளது.

இதன் போது , சந்தேகநபரிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபா காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , சந்தேகநபர் காவற்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் , தான் தனது திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்வதற்காக தென்னிந்திய திரைப்படமொன்றில் இருந்தது போல இந்த திட்டத்தை மேற்கொண்டாத தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், பகமுன காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *