துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகள், இன்று (21) மூன்றாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், நேற்று (20) இரண்டாவது நாளாகவும் உயர்நீதிமன்றில் இடம்பெற்றன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *