(UTV | கொழும்பு) – நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டம் –
- மஹரகம பொலிஸ் அதிகாரப்பிரதேசத்திற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு
- பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரதேசத்துக்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
கம்பஹா மாவட்டம் –
- கிரிந்திவெல பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குட்டிவில கிராம சேவகர் பிரிவு
இரத்தினப்புரி மாவட்டம் –
- எம்பிலிபிட்டிய பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
- பணாமுர பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
- வேவல்வத்த பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு
வவுனியா மாவட்டம் –
- பூவரசங்குளம் பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு