ரஃபேல் நடாலும் சந்தேகம்

(UTV | டோக்கியோ ) – டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடுவது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள டென்னிஸ் வீரர்களின் எண்ணிக்கையில் இறுதியாக ரஃபேல் நடாலும் இணைந்துள்ளார்.

தற்சமயம் இத்தாலிய ஓபனில் பங்கெடுத்துள்ள நடால், டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் பங்குகொள்வது நிச்சயமற்றது என்று செவ்வாயன்று கூறியுள்ளார்.

இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான ரஃபேல் நடால் இந்த கோடையில் டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், “சூழ்நிலைகளுக்கு” ஏற்ப முடிவெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

34 வயதான நடால் 2008 இல் பீஜிங் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றார்.

ஜூலை 23 ஆம் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்பு குறித்து நிச்சயமன்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ள அண்மைய டென்னிஸ் வீரர் நடால் ஆவார்.

முன்னதாக நான்கு முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது மூன்று வயது மகளை ஜப்பானுக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டால் ஒலிம்பிக்கில் பங்கெடுக்க மாட்டேன் என்று கூறினார்.

அதே நேரத்தில் ஜப்பானிய டென்னிஸ் வீரர்களான கீ நிஷிகோரி மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் விளையாட்டுக்கள் திட்டமிட்டபடி முன்னேற வேண்டுமா என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

தொற்றுநோய்க்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக்கை இரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று 60 – 80 சதவீத ஜப்பானிய மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர்.

ஆனால் உள்ளூர் அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் திட்டமிட்டபடி விளையாட்டு நடத்தப்படம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *