(UTV | கொழும்பு) – இம்முறை விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பத்திக் அலங்கார கூடுகள், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதனை ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த பத்திக் அலங்கார கூடுகள், கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து மாநகரசபை வளாகத்தில் அலங்கரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு பொது மக்களின் பங்களிப்பின்றி பத்திக் வெசாக் அலங்கார கூடுகள், மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.