நாள்தோறும் கொழும்பில் வலுக்கும் ‘டெல்டா’ தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாள்தோறும் கொழும்பில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில் , பி.1.617.2 என்ற நிலைமாறியே வைரஸ் பரவலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிய அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அண்மையில் ‘டெல்டா’ எனப் பெயரிடப்பட்ட பி.617.2 என்ற வைரஸே இவ்வாறு கொழும்பில் அதிகளவில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸானது அல்பா எனப்படும் பி.1.1.7. வைரஸ் விட வேகம் கூடியதாகும்.

தெமட்டகொட பகுதியில் குறித்த டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் ஐவர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று ஆரம்பமான நாள் முதல் மேல் மாகாணமே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இன்று (17) காலை வரை 122 259 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 58 151 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *