(UTV | கொழும்பு) – இன்னும் 2 வருடங்கள் செல்லும் வரை, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் நிலையாகும் வரை, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாதென்றும் கடந்த நல்லாட்சியில் வாகன இறக்குமதிக்காக வரம்பற்ற வரி நிவாரணங்கள் வழங்கப்பட்டதால், தேசிய வாகன தொழிற்றுரை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.