இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஹட்சன்

(UTV | கொழும்பு) – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, அந்த பதவிக்கு ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவராக இருந்த ஜயம்பதி பண்டார, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் குறித்த பதவிக்கு வெற்றிடம் எற்பட்டது.

இந்த நிலையில் குறித்த பதவிக்கு இன்று பதவியேற்றுள்ள ஹட்சன் சமரசிங்க 1969 ஆம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் ஹட்சன் சமரசிங்க, ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *