(UTV | கனடா) – கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பலர் விலகியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் பல வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை கனடாவை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காதது மிகவும் கடினமான முடிவு. நான் சிறுமியாக இருந்தபோதே ஒலிம்பிக்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என் கனவாக இருந்தது. ஆனால் தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து சவால்களும் என் இதயத்தில் ஆழமாக இருப்பதை நான் அறிவேன். இது எனக்கு நானே எடுக்கும் சரியான முடிவு. எதிர்கால ஃபெட் கோப்பை போட்டிகளில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவும், பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.