(UTV | கொழும்பு) – மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தொகை தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.