(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.