ஞானசாரவுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு [VIDEO]

(UTV | கொழும்பு) – முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது.

அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட உறுப்பினரும் கட்சியின் உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன் ஆகியோரும் முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஞானசார தேரர் அண்மையில் சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால் முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்துள்ளனர். தாம் வணங்கும் இறைவனை நிந்திக்கும் இந்தக் கருத்து பாரதூரமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *