மூன்று ஜப்பான் போர் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

(UTV | கொழும்பு) –   ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான மூன்று Destroyer கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

MURASAME, KAGA மற்றும் FUYUZUKI ஆகிய மூன்று பாரிய கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர்.

220 கப்பல் பணியாளர்களுடன் வருகை தந்துள்ள 151 மீட்டர் நீளம் கொண்ட FUYUZUKI கப்பல் நாளை (03) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இருதரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, அவுஸ்திரேலியாவில் இருந்து MURASAME மற்றும் KAGA ஆகிய போர்க்கப்பல்களும் நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்த கப்பல்கள் ‘JA- LAN EX’ எனப்படும் இலங்கை கடற்படையுடன் இணைந்த கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

இந்த இரு கப்பல்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளன.

கப்பல்களின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பம் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *