(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பயணிகள் எதிர்நோக்கியுள்ள சிரமங்கள் தொடர்பில் கொவிட் குழுவுக்கு அறிவித்து, மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை வரையறைகளுடன் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.