(UTV | கொழும்பு) – காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும் அக்கமகா பண்டிதர் கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (31) இடம்பெறவுள்ளன.
இறுதிச் சடங்கு அரச மரியாதையுடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
தேரரின் மறைவை முன்னிட்டு இன்று துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடல் பேலியகொடை வித்யாலங்கார பிரிவெனாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் கடந்த 27ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.
84 வயதான அன்னார், பௌத்த கல்வி மத்திய நிலையமான பேலியகொடை வித்தியாலங்கார பிரிவெனாவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.