(UTV | கொழும்பு) – சப்புகஸ்கந்தை – எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில், பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து, பொலிசார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, பெண்கள் காணாமல்போனமை தொடர்பில், காவல் நிலையங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயணப்பையிலிருந்து நேற்று (04) மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம், உருகுலைந்துள்ளமையால் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.