(UTV | கொழும்பு) – இலங்கை சினிமாவின் பிரபல பாடகரும், நடிகருமான லக்ஷ்மன் விஜேசேகர காலமானார்.
கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் இன்று பகல் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது, இறுதிக்கிரியைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.