பாகிஸ்தான் அரசினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு முழு வசதியுடன் கூடிய நூலகம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை ஜனாதிபதி கெளரவ கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள், 2021 நவம்பர் 11 அன்று தேசிய பாதுகாப்பு கல்லூரியை (NDC) திறந்து வைத்தார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு நாட்டு உறவின் அடைப்படையில், பாகிஸ்தான் அரசாங்கம் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு முழு வசதியுடன் கூடிய நூலகம் ஒன்றை நன்கொடையாக அமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ஆரம்ப பாடத்திட்ட முறைமையை அமைப்பதில் பாகிஸ்தானும் தனது முழு ஆதரவை வழங்கியது.

பதில் உயர் ஸ்தானிகர் திரு.தன்வீர் அஹமட், பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் முஹம்மது சப்தர் கான், நாட்டின் மூத்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், தூதுவர்கள்/இராஜதந்திர தூதரக உயர்ஸ்தானிகர்கள், தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *