(UTV | கொழும்பு) – சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. 52 வருடங்கள் பழமையான இந்த நிலையத்தை எவரும் வாங்குவார்களா? என்று தெரியாது எனவும் பதில் வழங்கிய வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இதனை விரைவாக திறப்பதற்கே அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸகந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கா நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பிய நிலையிலேயே வலு சக்தி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.