(UTV | கொழும்பு) – ஆபத்தான கொரோனா திரிபாக கருதப்படும் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு மீண்டும் முடக்கத்துக்கு செல்லாதிருப்பது மக்களின் கைகளிலேயே உள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்தபோது அவர் இவ்வாரு குறிப்பிட்டார். புதிய மாறுபாடுகள் தொடர்பாக நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் முழுமையான பகுப்பாய்வுகளின் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை , நாடு மீண்டும் முடக்க நிலைக்குச் செல்லாதிருப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றவேண்டும் எனவும் இராணுவ தளபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.