அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி

(UTV | கொழும்பு) – ஜப்பான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பல்வேறு வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது தளத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் உள்ள வணிக வளாகங்களில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *