(UTV | கொழும்பு) – நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும் என்பதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெயை நாட்டிற்கு கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய பொதுவாக 90 நாட்கள் ஆகும், இருப்பினும், நாட்டில் சமீபத்திய அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த செயல்முறை தாமதமானது என்று அமைச்சு கூறுகிறது.
கச்சா எண்ணெய்க்கான கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்த போதிலும், அது ஜனவரி 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள கச்சா எண்ணெய்க்கு பதிலாக இரண்டு மாற்று வகை கச்சா எண்ணெயை பெறுவதற்கு கேள்விமனு கோரப்பட்டுள்ளது.
அந்த இரண்டு வகைகளையும் டெண்டர்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தால், மீண்டும் ஒருமுறை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய அவசியம் இருக்காது என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.