திருக்கோவில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

(UTV |  அம்பாறை) – அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான பொலிசாரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

குறித்த சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் திருக்கோவில் மற்றும் அக்கறைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைப்பெற்றுவருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *