நாட்டின் பொருளாதாரம் எந்த திசையில் உள்ளது என்பது தெளிவாகிறது

(UTV | கொழும்பு) – கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதனை தொடர்ந்து பிரேமஜயந்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

பதவி நீக்கம் தொடர்பில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லையெனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்ய முடியும் முன்னறிவித்தல் விடுக்க அவசியமில்லை எனவும் பதவி நீக்கம் குறித்து ஊடகங்கள் ஊடாகத் தான் தாம் அறிந்து கொண்டதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் அரசாங்கத்தில் இடம்பெற்று அரசாங்கத்தை விமர்சித்த அமைச்சரவை அமைச்சர்கள் கூட அரசுடன் இருக்கும் போது, ​​இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை முதலில் பதவி நீக்கியமை விசேட அம்சமாகும்.

பாராளுமன்றத்தினால் எனக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள இச்சூழலில், கல்வித் தகைமையின் அடிப்படையில் வேலையோ அல்லது தகுதியோ இல்லாதவர்களுக்கு கல்வியின் பெறுமதி புரியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் தனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார்.

ஜனாதிபதி அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதா என வினவியதற்கு, அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படாவிடின் பிரச்சினையாக இருந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய செயற்பாடுகள் எந்த திசையில் முன்னெடுக்கப்படும் என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *