(UTV | கொழும்பு) – உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன் பருப்பை இறக்குமதி செய்ய வேண்டும்.
பருப்பு கொள்கலனை நாளை வரை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் கவனம் செலுத்துகிறேன். எதிர்காலத்தில் உள்நாட்டில் எப்படியாவது ஒரு காரைத் தயாரிப்போம்.” என்றார்.