(UTV | கொழும்பு) – சில சுகாதாரத் துறை தொழிற்சங்கத் தலைவர்கள் தமது வேலைநிறுத்தத்தின் போது ஆசிரியர் சங்கங்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள புரிதலை இவ்வாறான அறிக்கைகள் காட்டுவதாக ஒன்றியத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால், எந்தவோர் ஊழியருக்கும் அல்லது தொழிற்சங்கத்துக்கும் நீதிக்காக போராட உரிமை உண்டு என்றார்.
120 நாட்களுக்கு தொழிற்சங்க வேலைநிறுத்தம் நடத்துவது எளிதல்ல என்பதை நினைவுகூர்ந்த அவர், ஆசிரியர் போராட்டம் குறித்து மற்ற தொழிற்சங்கங்கள் அறிக்கை விடுவது நல்ல அறிகுறி அல்ல என்றும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களைத் தெரிவு செய்து அமைதியான முறையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.