(UTV | கொழும்பு) – பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பிலும் நாளை (15) முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் முறையிடும் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பினால் நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்காக நாளை (15) செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கைகோர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
An island wide signature campaign has been launched by the ‘Justice for all’ organisation appealing to the Gov of SL to honour its promise to repeal the Prevention of Terrorism Act (PTA). Join us on Tuesday 15th February 11 AM outside Fort Railway station. #RepealPTA pic.twitter.com/YEpXUGilF8
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) February 14, 2022