(UTV | கொழும்பு) – பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், தற்போது அதிகளவில் ஷோர்ட்ஈட்ஸ் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் தற்போது ரூ.900 ஆகவும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.950-1,000, முட்டை விலை ரூ.33, பருப்பு கிலோ ரூ.400, சர்க்கரை ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஷோர்ட்ஈட்ஸ் உணவுகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலைகள் 500% அதிகரித்து உற்பத்தி செலவை அதிகரிக்கச் செய்துள்ளன. உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.
கோழிக்கறி மற்றும் கறி ஒன்றின் விலை ரூ.300 ஆகவும், மீன் ரூ.240 ஆகவும், முட்டை ரூ.220 ஆகவும், காய்கறி சாதம் மற்றும் கறி ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.
சோற்றுப் பொதி ஒன்றின் விலை உயர்வால் பொதுமக்கள் 50 முதல் 150 ரூபாய்க்கு பராட்டா மற்றும் வடை போன்ற மலிவான மாற்றுகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என அசேல சம்பத் மேலும் தெரிவித்திருந்தார்.