‘பண்டிகைக் காலத்தில் 1 கிலோ அரிசி ரூ.300 ஆக உயரலாம்’

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைவர் முதித பெரேரா, எதிர்காலத்தில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு வரிசைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 95 வீதமான சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் பொதுமக்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ சாக்குகளுக்கு பதிலாக சிறிய பொதிகளில் அரிசியை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும் என முதித பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட இந்தியா 25 வீதம் இரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்காதா என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கையுடன் ஒப்பிடும் போது சீனா விவசாயத்திற்கு 200 வீதம் அதிக இரசாயன உரங்களை பயன்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் அரிசி இறக்குமதியை ஆரம்பிக்கும் போது ஒரு கிலோகிராம் உள்ளூர் அரிசியின் விலை 120 ரூபாவாக இருந்ததாகவும், தற்போது விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பெரேரா தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்புகளை நாடு முழுவதும் கடுமையான முறையில் விநியோகித்தால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரிக்காது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கொண்டு செல்லும் கொள்கலன்களை பொலன்னறுவைக்கு அனுப்பி, உள்நாட்டில் விளைவிப்பதாகக் கூறி சுமார் 180 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக அவர் அரசாங்கத்தின் துணை நிறுவனங்களிடம் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *