மேலதிக 200 இ.போ.ச பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கொழும்பில் இருந்து கிராமப்புறங்களுக்கு பயணிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக 200 இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த 200 பேருந்துகள் தினசரி வழக்கத்திற்கு மேலதிகமாக இயக்கப்படும் என இலங்கை பயண சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வரனஹன்ச தெரிவித்தார்.

நாளையும் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *