இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உலக வங்கி உதவத் தயார்

(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் உறுதியற்ற நிலையில் காணப்படுவதுடன், உயர் கடன் மீளச் செலுத்துகைகள், வரவு செலவு இடைவெளியை குறைப்பது, வெளியக உறுதித் தன்மையை மீளமைத்துக் கொள்வது மற்றும் நாட்டின் வறிய மற்றும் இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தணிப்பது போன்றவற்றை சீராக்கம் செய்வதற்கு அவசரமான கொள்கைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாக உலக வங்கி ஆண்டில் இரு தடவைகள் வெளியிடும் பிராந்திய தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் வறிய மற்றும் இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *