சவர்க்கார விலை உயர்ந்துள்ளதா?

(UTV | கொழும்பு) –  நாட்டின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரத்தின் விலைகள் உச்ச நிலையை எட்டியுள்ளதாக பிரதான வலையமைப்பில் உள்ள பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் இந்நாட்டில் சவர்க்காரத்தின் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமொன்றின் நுகர்வோர் பிரிவினரிடம் வினவிய போது, ​​தமது நிறுவனம் ஒரு சவர்க்காரத்தின் விலையில் எவ்வித அதிகரிப்பையும் செய்யவில்லை எனவும் அவ்வாறு அதிகரிப்பு செய்தால், அவர்களின் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ​​விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

டொலரின் பெறுமதி உயர்வினால் சவர்க்காரம் தயாரிக்கும் பொருட்களின் விலை உயர்வினால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு சவர்க்கார தயாரிப்பான சலவை சவர்க்காரம் ஒன்றின் விலை 135 ரூபாவிற்கும், குழந்தைகளுக்கான சவர்க்காரம் ஒன்றின் விலை 175 ரூபாவிற்கும், கிருமிநாசினி சவர்க்காரம் ஒன்றின் விலை145 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *