(UTV | கொழும்பு) – நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்காவது கொவிட் தடுப்பூசியை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.