(UTV | கொழும்பு) – மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலேகா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.