சந்தையில் சைக்கிளுக்கும் தட்டுப்பாடு

சந்தையில் சைக்கிளுக்கும் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் சைக்கிள்களதும் கையிருப்பு முடிவடைந்துள்ளதால் சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் அதனை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சைக்கிள் கையிருப்பு தீர்ந்து வருவதால் விற்பனையாளர்கள் வெவ்வேறு விலையில் சைக்கிள்களை விற்பனை செய்வதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் சைக்கிள்களுக்கு அதிக தேவை உள்ளது.

சில சைக்கிள் விற்பனையாளர்கள் சாதாரண சைக்கிள் விலையை ரூ.60,000 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜியர் கொண்ட சைக்கிள் ஒன்றின் விலையும் 77,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இத்தகைய பின்னணியில் சில சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் பணத்தினை தவணை முறையில் செலுத்தும் வகையில் சைக்கிள்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )