(UTV | கொழும்பு) – காலிமுகத்திட மக்கள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) காலை கொழும்பிலுள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த வாரத்தில் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் போராட்டத்தின் பிரஜைகள் குழுக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்;
“…நாம் காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடினோம், அவர்கள் அவர்களது நிபந்தனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நாளைய தினம் நாம் இறுதி முடிவினை எட்டவுள்ளோம். தற்போது நாம் எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளோம். நாம் ஏனைய சுயாதீன கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியாக உள்ளோம். மேலும், ஜனாதிபதி தெரிவின் பொது எனக்கு தனியான முடிவொன்றினை எடுக்க முடியாது, நான் தனிநபர் அல்ல. இது ஒரு கட்சி. அனைவரதும் யோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பின்னர் அது தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்கப்படும் என நாம் தீர்மானிப்போம்…”