முச்சக்கர வண்டிகளுக்கு விசேட எரிபொருள் நிலையங்கள்

(UTV | கொழும்பு) – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (25) தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக இருக்கும். அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதும் சவாலானது என அமைச்சர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால், QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திற்கும் எரிபொருளை விநியோகிக்கவில்லை எனவும், வரம்பற்ற கையிருப்பு இருந்தாலும் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் எரிபொருளை வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்களில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை 3,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 4,000 மெற்றிக்தொன் டீசலின் எல்லையுடன் வெளியிடுகிறது.

தற்போதுள்ள கையிருப்புகளை அதிகபட்ச காலத்திற்கு பல்வேறு முறைகள் மூலம் பயன்படுத்த அரசு உத்தேசித்துள்ளதாகவும், இதனால் மக்கள் வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலகங்களுக்கு வாகன பதிவு முறைமை வழங்கப்பட உள்ளது. அத்துடன், முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு விசேட எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக பஸ்களை பதிவு செய்யும் முறையை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *