முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸுக்கு

(UTV | கொழும்பு) –  ‘சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாடு 2022’ தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (29) பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்குச் சென்றுள்ளார்.

உலக அமைதி அமைப்பின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 28 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாடு நாளை (30) மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதுடன், இம்முறை அதன் தொனிப்பொருளில் “கொரிய தீபகற்பத்தை ஒன்றிணைப்பதற்கான சமாதான செயல்முறையின் கலாச்சாரமயமாக்கல்” என்பதாகும்.

இந்த சர்வதேச மாநாட்டில் பல வெளிநாட்டு அரச தலைவர்களை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு வெளிநாடுகளில் இருந்து பெறக்கூடிய உதவிகள் குறித்தும் கவனம் செலுத்த நம்புவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *