CWG 2022: வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை நெத்மி அஹிம்சா பொருத்தொட்ட இன்று அதிகாலை நாட்டினை வந்தடைந்தார்.

அபுதாபியில் இருந்து இன்று (08) அதிகாலை 03.50 மணியளவில் எதிஹாட் எயார்லைன்ஸ் விமானமான EY-264 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு அழைக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதன்போது அவரது தந்தை, தாய், சகோதரி மற்றும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் குழு அமைச்சு மற்றும் இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *