‘அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளது இந்நாட்டின் 220 இலட்சம் மக்களே’

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளது இந்நாட்டின் 220 இலட்சம் மக்களே எனவும், அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதையே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அரச அதிகாரிகள் குழுவொன்றிற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று பிரதமர் அலுவலகத்தின் ஊடாக முன்வைக்கும் நடவடிக்கையில் மொட்டுக் கட்சி துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இத்தருணத்தில் அவ்வாறானதோர் செயலை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தன்னிச்சையான முடிவினால் உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்துள்ளதோடு, இன்றும் அவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டின் பிள்ளைகள் முறையான கல்வியை பெறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, இது போன்ற அரசியல் பழிவாங்கல்கள் என்ற போர்வையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு சலுகைகள் வழங்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *