2023 வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

(UTV | கொழும்பு) –   2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் காட்டுகின்றன.

2023 – 2025 இடைக்கால வரவுசெலவுத் திட்டம் என்பது அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அரசாங்க நிதி இலக்குகளில் சிலவாகும், அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% ஆக இருக்கும் அரசாங்க வருவாயை 11.3 ஆக உயர்த்துவது எதிர்பார்க்கப்படும் இலக்காகும். %

மேலும், வரவு செலவுத் திட்ட இடைவெளியை மைனஸ் 9.9% இலிருந்து மைனஸ் 6.8% ஆகக் குறைப்பது எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு இலக்கு எனவும் இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *