‘SLPP சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்படும்

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் காலங்களில் தமது பதவிகளில் இருந்து நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு வேறு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதன்படி கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று(31) ​​நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 12 உறுப்பினர்கள் நேற்றைய தினம் (31) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுடன், நேற்று (31) முதல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, பொதுஜன முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பட்டி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயண கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார. குமாரசிறி மற்றும் பன்னிரண்டு எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *