“முன்னாள் அமைச்சர்களின் குப்பையை” தூக்கி எறிய தயார்”

(UTV | கொழும்பு) –  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் முழுமையாக கணக்காய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லை, செத்சிறிப்பாயவில் முதற்கட்டமாக அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையில் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது தனது அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சில முன்னாள் அமைச்சர்களின் குப்பைகளை தன்னால் கையாள முடியாத காரணத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 137 மில்லியன் ரூபா பெறுமதியான சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அது வீண்விரயம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த திரு.பிரசன்ன ரணதுங்க,

“நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண்போம். வேலைநிறுத்தம் செய்வதற்கு முன் தொழிற்சங்கங்கள் பேசி பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் நம் அனைவருக்கும் எளிதாக இருக்கும். தலைவர் இல்லாத போராட்டங்களுக்கு இருப்பு இல்லை.

காலிமுகத்திடல் போராட்டத்தின் உண்மைத் தன்மை தற்போது வெளியாகியுள்ளது. ஒரு அமைப்பின் தொழிற்சங்கங்கள் அந்த நிலைக்கு வரக்கூடாது. ஒரு தொழிற்சங்கம் முறையான முறைப்படி தொழில்முறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பணிபுரியும் நிறுவனம் நஷ்டம் அடையும்.

இந்த நிறுவனங்களை மீட்க வந்தேன். இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் அவர்களின் பணியை அறிந்த உயர் தகுதி வாய்ந்த தலைவர்களை நான் நியமித்துள்ளேன். அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். எங்களை மிரட்டி பயமுறுத்த முடியாது..”

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசியலில் போராட்டக்காரர்கள் விரும்புவது போன்று மாறுவதற்கு தாம் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *