(UTV | கொழும்பு) – புகையிரத பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், குறித்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்தார்.
தென் பகுதி புகையிரத பாதையில் பயணச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பயன்படுத்தப்படாத பயண சீட்டுக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புகையிரத ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
புகையிரத ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான அதியுச்ச காலம், 14 நாட்களாக இருந்தநிலையில் தற்போது, அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.