இரு குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் விடுதலை

(UTV | கொழும்பு) –   பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்த குற்றச்சாட்டுக்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினர் வழக்கு விசாரணைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இடம்பெயர்ந்த பகுதிகளுக்கு வாக்களிப்பதற்கு மக்களை அழைத்துச்சென்றமை மற்றும் 95 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மக்களின் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *