(UTV | கொழும்பு) – இன்று (08) காலை கங்கசந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை சென்று கொண்டிருந்த உத்தர தேவி நரகந்தர ரயில் தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
முன் எஞ்சின் பொருத்தப்பட்ட வண்டியும் மற்றைய ஒரு வண்டியும் அங்கு தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக வடக்கு வழித்தடத்தில் இதுவரை ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.