களத்தடுப்பில் சொதப்பல் : ரோகித் சர்மா விளக்கம்

(UTV |  பெர்த் ) – ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ண தொடரில் பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்தியாவை தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த தோல்வி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது;

“.. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். அதனால் தான் 134 என்ற எளிதான இலக்கை கூட எட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். நாங்கள் களத்தடுப்பில் கடுமையாக சொதப்பினோம். கடும் குளிரால்தான் பிடிகளை நழுவ விட்டோம் என்று காரணம் சொல்ல நான் விரும்பவில்லை. இதற்கு முன் இது போன்ற சூழலில் விளையாடி இருக்கிறோம். எனினும் நேற்றைய போட்டியில் எங்களது களத்தடுப்பு சரியாக இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக களத்தடுப்பு செய்தோம். ஆனால் நேற்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எங்களால் சில ரன் அவுட்டுகளை செய்ய முடியவில்லை. நானும் ரன் அவுட்டை மிஸ் செய்தேன் இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *