இழப்பீடு கோரும் ரிஷாத் தரப்பு

(UTV | கொழும்பு) –   ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனை கைது செய்தமை, தடுத்து வைத்தல், அவதூறு செய்தமை உள்ளிட்ட பல விடயங்களின் அடிப்படையில் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் தனிப்பட்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது;

“இதுவரை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பொய்யான குற்றச்சாட்டின் கீழ் பொலிஸில் முறைப்பாடு செய்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 மாதங்கள் காவலில் வைத்தல் தொடர்பாக எடுக்கக்கூடிய சிவில் நடவடிக்கை, இழப்பீடு கோரி வேல்ஸ் வழக்கை தாக்கல் செய்வதாகும். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவமதிப்பு, தடுப்புக்காவல் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். இப்போது அந்த நடைமுறைக்குள் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறோம்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *