(UTV | கொழும்பு) – மதிப்பு கூட்டப்பட்ட வரி மசோதாவுக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை மனுக்களும், உள்ளூர் வருமான வரி திருத்த மசோதாவுக்கு எதிராக 8 அடிப்படை உரிமை மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த 10 மனுக்கள் தொடர்பான பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.